Tuesday, October 29, 2013

மதமும் ஜாதியும் மனிதனும்


90
சதவிகித 
இந்தியர்கள் முட்டாள்கள். அவர்களை சமூக
விரோதிகளால்
மதத்தின் பெயரால் சுலபமாக தவறாக வழி நடத்தி செல்லமுடியும்
-மார்கண்டேய
கச்சு .


இவர் கூறியிருப்பது உண்மையா ? இல்லையா ?இது தர்கத்துக்குரியது.அவருடைய
வார்த்தைகள் சற்று கடுமையானது .ஒவ்வொரு இந்தியனையும் கடுமையாக
தாக்குகிறது. உண்மை .ஆனால் அவருடைய கருத்தில் உண்மை இருக்கிறதா என்றால் ,உண்மையென்று
ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் .அநேகமாக நாம் எல்லோருமே மதம் என்று
வரும்போது மிகவும் உணர்சிவசப்படக்கூடியவர்களாக இருக்கிறோம் என்பது
உண்மை .எல்லோருக்குள்ளிலும் இருக்கும் மதம் என்கிற சாப்ட்வேர் ,மிகவும்
சென்சிடிவாக இருக்கிறது .யோசிக்காமல் உணர்ச்சிவசபட வைக்கிறது
.யாரோ இரண்டுபேர் நம் மதத்தை பற்றி அவதூறாக பேசினால் ,அல்லது மதம் சார்ந்த
விசயங்களில் ஆட்சேபகரமான கருத்துக்களை சொன்னாலோ,நம்மால் பொறுத்துக்கொள்ள
முடியவில்லை.நாம் அதிகம் உணர்ச்சிவசப்படுகிறோம் . அந்த
உணர்சிவேகத்தை சிலர் அரசியல் காரணங்களுக்காகவும் ,தங்கள் சுய லாபங்களுக்காகவும் ,
அதைவைத்து காசுபண்ணுவதர் காகவும் பெட்ரோல் ஊற்றி
கொழுந்துவிட்டெரிய
செய்கிறார்கள் . அதனால் அந்த மதத்திற்கோ ,சமூகத்திற்கோ யாதொரு நன்மையையும்
வராது .மாறாக மேலும் துயரங்களும் சாதாரண மனிதனுக்கு சங்கடங்களும்
,சக மனிதனோடு பகையும் ,இணக்கலவரங்களும்தான் மிஞ்சும் . இந்த விளைவுதான் இதை தூண்டியதற்கு காரணமான அவதூறு பேசியவரின்  நோக்கம் கூட .அது இப்போது
நிறைவேறிவிட்டது . பெட்ரோ ஊற்றிய சொந்த மதத்துக்காரர் அதில் லாபம் பார்த்துவிடுவார். துயரப்படுவது அப்பாவி சமான்யந்தான் .


அப்போது நான் என்ன சொல்லவருகிறேன் ?
எது சொன்னாலும் சும்மா
இருந்துவிடவேண்டுமா? பதிலடி கொடுக்காமல் இருந்துவிட  வேண்டுமா ? என்று கேட்கலாம் . வினை விதைத்தவனின் எண்ணம் ஈடேரவேன்றும் என்றால் ,உணர்ச்சிக்கு
இடம்கொடுத்து , கட்சு அவர்கள் சொன்னதுபோல் முட்டாளாக இருக்கவேண்டுமென்றால் ,அதற்கு பதிலடி கொடுங்கள் .உங்கள் உணர்ச்சியை பயன்படுத்தி ஒரு
தலைவன் என்று ஒருவன் உங்கள் மதத்தில் உங்கள் இனத்தில் உதயமாவான்
.உங்கள் உணர்சிகளின் கற்களால் அரசியல் கோட்டைகட்டி அவன் MLA
,MP ஆகிவிடுவான் .
மதத்தின் பெயரைச்சொல்லி ,ஜாதியின் பெயரைச்சொல்லி தலைவனான  எவனும் அந்த மதத்திற்கோ சாதிக்கோ எதுவும் உபயோகமாக செய்ததில்லை .கலவரங்களை தவிர
.


அப்போது ஜாதியும் மதமும் வேண்டாமா என்றால் ,நிச்சயம் ஜாதி என்பது வேண்டாம்
,மதம் வேண்டும் ,ஆனால் அதை நாம் கடைப்பிடிக்கும் முறையும் ,நாம் மதங்களை
ஏற்றுக்கொள்ளும் விதமும் மாறுபட வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோல்
. மதத்தையும் சாதிபோல் ஒரு அடையாளமாக ,ஏற்றுக்கொண்டிருக்கிறோம் . அதுவே நமது
உணர்ச்சி வேகத்திற்கும் ,துயரங்களுக்கும் காரணம் . மதங்கள் மனிதனுக்கு மதம்பிடிப்பதற்காக வந்தவை அல்ல . அவை வாழ்கை முறைகள்
.ஒழுக்கத்தோடு வாழ்வதற்காக ஏற்பட்டவை .இன்று அவை மறக்கப்பட்டு வெறும்
சம்பிரதாயங்களாகவும் ,சடங்குகளாகவும் மாறிவிட்டன .ஒழுக்கம் முக்கியமாக தனிமனித
ஒழுக்கம் இல்லாமலே போய்விட்டது .அதனாலேயே  ஒழுக்கம் இல்லாதவர்கள் மதத்தலைவர்களாகவும் ,சமுதாயதலைவர்கலகவும் வலம் வருகிறார்கள்.அவனிடம் அதிகாரம் ,பணம் ,பேச்சுத்திறன் இருந்தால்  போதும் . அவனை தலைவனாக ஏற்றுக்கொள்கிறார்கள் . அவன் தனிமனித ஒழுக்கம் பற்றி கவலை
இல்லை . இதில் ஒரு குறிப்பிட்ட மதத்தை பற்றி சொல்லவில்லை. சொல்லிக்கொள்வதில் இருக்கும் அக்கறை ,அந்த மதங்கள் போதிக்கிற ஒழுக்கத்தை கடைப்பிடிக்க ஆர்வம் இல்லை
.மதம் இன்று வெறும் சடங்குகளாகி விட்டன .பூஜைகளும்,தொழுகைகளும் ,வணக்கங்களும் வெறும் சடங்குகளாக செய்யப்படுகின்றன .மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்துவதற்காகதான்.அனால் அதன் நோக்கம் மாறுபட்டு ,மதம் மனிதனின் பொருளாதார துயரை நீக்கவும் ,நோயைகுணப்படுத்தவும் ,அரசியல் மற்றும் சுயலாபத்திற்கும் மட்டுமேஉபயோகிக்கப்படுகிறது .இல்லாவிட்டால் மறு உலகில் ,அல்லது மறு பிறவியில் நற்பதவி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பின்பற்ற
படுகின்றன .அதற்குகூட நல்லொழுக்கம் அவசியம் என்று சொல்லப்பட்டாலும்
,நல்லொழுக்கம் கடைப்பிடிக்கப்படுவதில்லை .தான் செய்த பாவங்களுக்கு ,பரிகாரம் செய்தால் போதும் ,அல்லது ஏதாவது சடங்குகள் செய்தால் போதும் என்று ,
ஹோட்டல் வைத்தியர்களையும் ,சாமியார்களையும் ,
ஜோதிடர்களையும் தேடிப்போய் அவர்கள் சொல்லும் பரிகாரங்களைத்தான்
மதம், ஆன்மிகம்
என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள் .யாரும் சுய ஒழுக்கம் பற்றி கவலை படுவதில்லை .மதம் என்று வந்துவிட்டால் மற்ற மதத்தினரிடம் ,மனிதாபிமானம் என்ற ஒன்றையே மறந்து விட்டு பழகுகிறார்கள் .மதமும் ,ஜாதியும் மனிதனை பிரித்துப்பார்கிறதே தவிர மனிதனை உயர்த்த மனிதத்தை
உயர்த்த முடியவில்லை .இது மதங்களின் குற்றமல்ல,மதங்களை ஏற்றுக்கொண்ட மனங்களின் புரிதலே காரணம் .


மதத்தை நாம் எப்படி பின்பற்ற வேண்டும் என்ற புரிதல் வேண்டும் . எந்த
மதத்தை சேர்ந்தவராக இருப்பினும் ,அந்த மதத்தில் போதிக்கப்பட்டுள்ள நல்லொழுக்கங்களை பின்பற்றினாலே அந்த
  மதத்தின் உயர்வு மற்றவர்க்கு புரியும். மதம் என்பதை சொந்தவிசயமாக எல்லோரும் கொள்ள
  வேண்டும் .அதை நம் வீட்டிலும் வணக்கஸ்தலங்களில் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும்
.அடுத்த மதத்தையோ ,அடுத்த மதத்தினரையோ விமர்சிக்க வேண்டியதில்லை.நமக்கு பிடித்த மதத்தை
பின்பற்றினால் போதும் .நமக்கு நம் மதம் சிறந்ததென்று தோன்றுவதுபோல் , அவர்களுக்கு அவர்கள் மதம் சிறந்ததாக தோன்றும்.அவர்களுடைய நம்பிக்கைகளை
தவறு என்று சொல்வதே நாகரீகமற்ற செயல் .அது நிச்சயம் நாம் சார்ந்திருக்கும்
மதத்திற்கு செய்யும் நன்மை அல்ல .


குரானில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வசனம்


"அவர்கள் வழி அவர்களுக்கு ,
உங்கள் வழி உங்களுக்கு "


என்று சொல்கிறது .அதன் பொருள் அதுதான் அதுதான் உயர்ந்த பெருந்தன்மையை
காண்பிக்கும் .முஹம்மது நபி அவர்கள் கிருத்துவர்கள் வந்திருந்த பொது ,அவர்கள் வழிபடுவதற்காக மசூதியிலேயே ,
வசதி செய்து கொடுத்தார்கள் என்று படித்திருக்கிறோம் . அதுதான்
  சகிப்புத்தன்மை .அது எல்லோருக்கும் வேண்டும். மற்றவர்களுடைய வணக்க முறைகளை நாமும்
  கடைபிடிக்க வேண்டுமென்பதில்லை .அவர்கள் நம்பிக்கைகளில் உரிமைகளில் தலையிடாமல்
  இருந்தால் போதும் . மதத்தை வீட்டில் வைத்துவிட்டால் ,வழியில் எல்லோரும் மனிதர்களே .


அப்படி நடந்து கொண்டால் மார்கண்டேய கச்சு அவர்கள் சொன்னது போல் எந்த சமூக
விரோதியும் நம்மை முட்டாளாக ,
மிருகமாக மாற்ற முடியாது .